Connect with us

Moral Stories - Tamil

Tenali Raman – Strange Drama – தெனாலிராமன் – தெனாலி தந்திர நாடகம்

கோபத்துல நாம நம்ம நண்பர்களோட சண்டை போட்டாலும்… கடைசியில நட்பு தான் ஜெயிக்கும்

தெனாலி தந்திர நாடகம்

காட்சி-01 மன்னர், தெனாலி, மந்திரி, voice over…

VOICE OVER: ஒருநாள் கிருஷ்ணதேவராயரின் அரச சபையில் ஒரு

முக்கியமான விவாதம் நடந்து கொண்டிருந்தது… சபையில் இருந்த தெனாலிராமனோ கொட்டாவி விட்டபடி தூங்க ஆரம்பித்தான்..

தெனாலிராமர்: ஆ…….வ்…

VOICE OVER: அதைக் கண்ட மன்னர்…

மன்னர்: தெனாலி இது உன் படுக்கை அறை அல்ல.. ராஜசபை….நீர்

மரியாதை தெரியாமல் கொட்டாவி விடுகிறீரே… இது போல் அநாகரிகமாக நடந்து கொள்பவர்களுக்கு… இங்கு இடமில்லை… இங்கிருந்து சென்று விடுங்கள்…

தெனாலிராமர்: தங்கள் இஷ்டம் மன்னா… நான் வருகிறேன்…

மந்திரி: நீங்கள் கூறியதற்கு சிறிதும் வருத்தம் தெரிவிக்காமல்

Advertisement

எத்தனை மமதையுடன் செல்கிறார் தெனாலி… அவரை இனிமேல் அரச சபையில் நுழைய விடவேக்கூடாது மன்னா…

மன்னர்: ஆமாம்… ஆமாம்… வர வர தெனாலிக்கு சிறு மமதை

அதிகம் தான் ஆகிவிட்டது…

தெனாலி தந்திர நாடகம்

காட்சி-02 மன்னர், சிறுவன், மந்திரி, voice over…

VOICE OVER: பல நாட்கள் சென்றன… தெனாலி அரச சபைக்கு வரவே

இல்லை… அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை… பத்தாவது நாள் ஒரு பழங்குடி சிறுவன் அரச சபைக்கு வந்தான்…

சிறுவன்: வணக்கம் மன்னா… நான் காட்டிலுள்ள சாது கங்காதரரின்

வேலையாள்…. சில நாட்களுக்கு முன் உங்கள் அரசவையிலிருந்து தெனாலிராமன் என்பவர் எங்கள் ஆசிரமத்திற்கு வந்து தங்கியிருந்தார்… இன்று காலையில் நதியில் நீர் எடுப்பதற்காக சென்றவர்… கால் வழுக்கி யமுனை நதியில் விழுந்து விட்டார்…

மன்னர்: அப்படியா… பிறகு காப்பாற்றிவிட்டீர்களா…

Advertisement

சிறுவன்: இல்லை மன்னா… ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு

ஓடுவதால்… அவரின் உடல் கூட கிடைக்கவில்லை மன்னா… இந்த தகவலை சாது கங்காதரர் உங்களிடம் தெரிவிக்கக் கூறினார்…

மன்னர்: ஐயோ தெனாலி… எனது நண்பா… நீ என்னை விட்டு பிரிந்து

விட்டாயா…

மந்திரி: மன்னா இந்த செய்தியை கேட்கவே வருத்தமாக

இருக்கிறது.. தெனாலி ராமன் தனது நகைச்சுவையால் இந்த சபையை சிரிக்கவைத்தவர்.. அவரின் புத்திசாலித்தனத்திற்கு ஈடு இணையே இல்லை மன்னா.. அவரின் இழப்பு… இந்த சாம்ராஜ்யத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்…

மன்னர்: ஆமாம்… இப்போது எல்லாவற்றையும் சொல்லுங்கள்…அவர்

இருந்த போது.. இனிமேல் சபைக்குள் அவரை விடக்கூடாது என்று சொன்ன அமைச்சர் தானே தாங்கள்…

சிறுவனே… சாது கங்காதரரையாவது பார்த்து பேசினால் தான் என் மனம்… ஆறுதல் அடையும்… என்னால் அவரைப் பார்க்க முடியுமா…

சிறுவன்: வாருங்கள் அரசே… நான் கூட்டிக் கொண்டு போகிறேன்…

Advertisement

தெனாலி தந்திர நாடகம்

காட்சி-03 மன்னர், தெனாலி(சாது), voice over…

மன்னர்: சாதுவே வணக்கம்… என்னுடைய தெனாலிக்கு சிலநாட்கள்

அடைக்கலம் கொடுத்ததற்கு மிகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்… ஆனால்… ஆனால்… அவரைக்… காப்பாற்றியிருக்கக் கூடாதா…

சாது: நான் என்ன செய்ய முடியும் மன்னா… விதி வந்தால்

எல்லோரும் போக வேண்டியது தான்.. தெனாலி மட்டும் அதற்கு விதி விலக்கு ஆக முடியுமா…

மன்னர்: இல்லை சுவாமி.. நான் தான் தெனாலியை கொன்று

விட்டேன்.. ஏதோ அசதியில் தூங்கியவரை… அனாவசியமாக கடிந்து கொண்டதினால்.. தானே அவர் இந்த நதிக்கரைக்கு வந்தார்… இப்படிப்பட்ட சோகமான முடிவை தேடிக் கொண்டார்… என் உயிருக்கு உயிரான நண்பனை அந்த தெய்வம் என்னிடமிருந்து பிரித்து விட்டதே.. ஐயோ…

சாது: மன்னா… வருந்தாதே.. மாண்டவர் என்றும்

திரும்புவதில்லை.. ஆகவேண்டிய காரியத்தைப் பார்…

Advertisement

மன்னர்: சுவாமி… என்னுடைய தெனாலி… கால் வழுக்கி விழுந்த

இடத்தையாவது காண்பியுங்கள்… அங்கு சென்று என் நண்பனுக்காக அஞ்சலி செலுத்த வேண்டும்… இனி என்று நான் அவரைக் காணப் போகிறேன்..

சாது: மன்னா வருந்தாதே… உன் இஷ்ட தெய்வத்தை நினைத்துக்

கொள்… உன் தெனாலி மீண்டும் வருவான்… கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்….

VOICE OVER: கண்ணைத் திறந்து பார்த்த மன்னர்…

சாது: இப்போது உங்கள் கண்ணைத் திறந்து பாருங்கள் மன்னா..

VOICE OVER: அங்கு தெனாலி இருப்பதைப் பார்த்து… அதிர்ச்சி

அடைகிறார்…

மன்னர்: நண்பனே நீ எங்கு சென்றாய்… என்னைக் கலங்கடித்து

விட்டாயே… ஆமாம் அந்த சாது எங்கே…

Advertisement

தெனாலி ராமன்: மன்னா சாதுவும் நானே… தெனாலியும் நானே…

மன்னர்: ஹ..ஹ… ஹா…

VOICE OVER: என்ன குழந்தைகளே… கோபத்துல நாம நம்ம

நண்பர்களோட சண்டை போட்டாலும்… கடைசியில நட்பு தான் ஜெயிக்கும்னு புரிஞ்சிகிட்டீங்களா…

Continue Reading
Advertisement
Advertisement