Moral Stories - Tamil
Tenali Raman – The Ancestral Wealth – தெனாலிராமன் – சூழ்ச்சியை வென்ற தெனாலி
நம்ம சுத்தி என்ன நடக்குதுன்னு… நாம கவனமா பாத்துகிட்டேஇருக்கணும்… அப்ப தான் நம்மளை யாராலயும் ஏமாத்த முடியாது

சூழ்ச்சியை வென்ற தெனாலி
காட்சி-01 மன்னர், தெனாலி, வணிகர், மந்திரி, காவலாளி,
voice over…
VOICE OVER: ஒரு நாள் அரச சபை நடந்து கொண்டிருந்தது…
அப்போது அங்கு ஒரு வணிகர் வந்தார்… அவர் கையில் ஒரு இரும்பு பெட்டி இருந்தது…
வணிகர்: மன்னருக்கு வணக்கம்… நான் உங்களிடம் ஒரு உதவி
கேட்டு வந்துள்ளேன்… மன்னா நான் ஒரு வணிகன்… நான் ஒரு மாதம் யாத்திரை சென்று வர திட்டமிட்டு இருக்கிறேன்… என் முன்னோர்களின் சொத்துக்கள் அனைத்தையும், இந்த இரும்புப் பெட்டியில் வைத்திருக்கிறேன்… இதை நீங்கள் உங்கள் பொறுப்பில் வைத்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் மன்னா…
மன்னர்: அப்படியே ஆகட்டும்… யாரங்கே… இந்த இரும்புப்
பெட்டியை எடை போட்டுக் கூறுங்கள்..
சரி… இதை பத்திரமாகப் பார்த்துக் கொள்வார்கள்… உங்கள் சுப யாத்திரைக்கு என் வாழ்த்துக்கள்…
காவலாளி: 10 குண்டு மன்னா….
மன்னர்: யாரங்கே… இதை நம் கஜானாவில் வையுங்கள்…
மந்திரி: மன்னா.. அரசாங்கப் பணத்தை மட்டும் தான் நம்
கஜானாவில் வைக்கவேண்டும் என்பது சட்டம்… ஆகையால் இதை நம் நம்பிக்கைக்குரிய தெனாலிராமன் வீட்டில் வைத்து பாதுகாக்கச் சொல்லலாமே மன்னா…
மன்னர்: நல்ல யோசனை… தெனாலி ராமா… நீர் என்ன
கூறுகிறீர்கள்…
தெனாலிராமர்: உங்கள் உத்தரவு மன்னா…
காட்சி-02 மன்னர், தெனாலி, வணிகர், மந்திரி, voice over…
VOICE OVER: ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த வணிகர் மீண்டும் அரச
சபைக்கு வந்தார்…
வணிகர்: மன்னருக்கு வணக்கம்… நான் என் யாத்திரையை
முடித்துவிட்டு வீடு திரும்பி விட்டேன்… என் பெட்டியை என்னிடம் தரும்படி, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் மன்னா…
மன்னர்: தெனாலி… இவர் பெட்டியை இவரிடம் கொண்டுவந்து
ஒப்படைத்து விடுங்கள்…
தெனாலிராமர்: சரி மன்னா….
VOICE OVER: தெனாலிராமன் பெட்டியை எடுத்து வர, தன் வீட்டிற்கு
சென்றார்… அவர் வீட்டிற்கு சென்று அந்த பெட்டியை எடுத்ததும்… மிகவும் அதிர்ச்சி அடைந்தார்… ஏனெனில் அந்த பெட்டியின் எடை முன்பை விட வெகுவாக குறைந்திருந்தது… தெனாலி ராமன் அந்த வணிக்ர் ஒரு ஏமாற்றுக்காரன் என்பதை சரியாக புரிந்து கொண்டார்.. அந்த பெட்டியையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்… பின்னர் அரச சபைக்கு சென்றார்
தெனாலிராமர்: மன்னா… இந்த வணிகரின் முன்னோர்கள் என்
வீட்டிற்குள் நுழைந்து விட்டனர்… அவர்கள் அந்த பெட்டியை எடுத்துவர அனுமதிக்க மறுக்கின்றனர் மன்னா…
வணிகர்: என்னது என் முன்னோர்களா…ஏய்…
ஏமாற்றுக்காரா… நாடகமாடாதே…
மன்னா, தெனாலிராமன் என் சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்..
மந்திரி: ஆம் மன்னா… தெனாலிராமன் நம்மை
ஏமாற்றுகிறார்..
மன்னர்: தெனாலிராமா… என்ன இது… நாங்கள் அனைவரும்
இப்போதே உங்கள் வீட்டுக்கு வருகிறோம்… நீங்கள் சொல்வது பொய்யாக இருந்தால்… உங்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும்…
தெனாலிராமர்: சரி மன்னா….
VOICE OVER: அனைவரும்… தெனாலிராமன் வீட்டுக்கு
வருகின்றனர்… அந்த பெட்டியை சுற்றி எறும்புக்கூட்டம் இருப்பதைப் பார்க்கின்றனர்…
மன்னர்: அந்த பெட்டியைத் திறந்திடுங்கள்….
ஆ… என்ன பெட்டியினுள் சர்க்கரை இருக்கிறது…
மன்னர்: வணிகரே… இது தான் உங்கள் சொத்தா… என்னை
ஏமாற்றிய இவரை சிறையில் அடையுங்கள்…
வணிகர்: மன்னியுங்கள் மன்னா… இந்த மந்திரிகள் இருவரும்
தான், தெனாலிராமன் மீது பழி சுமத்த இவ்வாறு செய்யச் சொன்னார்கள்…
மன்னர்: இவர்கள் இருவரையும் சிறையில் அடையுங்கள்…
வணிகர் + மந்திரி : மன்னித்து விடுங்கள் மன்னா…
மன்னா… எங்களை மன்னித்து விடுங்கள்… மன்னா…
மன்னர்: தெனாலிராமா… அந்த பெட்டியில் சர்க்கரைதான்
இருக்கிறது என்று எவ்வாறு கண்டுபிடித்தீர்…
தெனாலிராமர்: அந்த பெட்டியைச் சுற்றி எப்போதும் எறும்புக் கூட்டம்
இருந்து கொண்டிருந்தது… விலையுயர்ந்த கற்களோ, பணமோ இருந்தால்… எறும்புகள் ஏன் செல்லவேண்டும்… மேலும் எறும்புகள் சர்க்கரையை தின்று விட்டதால்… பெட்டியின் எடை பாதியாக குறைந்து இருந்தது… இவற்றை உங்கள் முன்னால் நிரூபிக்கவே… முன்னோர்கள் என்று கூறினேன் மன்னா…
மன்னர்: தெனாலி… உங்கள் அறிவை மெச்சினேன்…
இந்தாருங்கள்… என் முத்துமாலையை பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்…
தெனாலிராமர்: நன்றி மன்னா…
VOICE OVER: என்ன குழந்தைகளே… நம்ம சுத்தி என்ன
நடக்குதுன்னு… நாம கவனமா பாத்துகிட்டேஇருக்கணும்… அப்ப தான் நம்மளை யாராலயும் ஏமாத்த முடியாது…
என்ன கவனமா இருப்பீங்களா?
*****************************************************************************************************