Connect with us

Moral Stories - Tamil

Tenali Raman – The Black Cloak – தெனாலிராமன் – கருப்புப் படைத்தலைவன் தெனாலி

எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும் நமக்கு புத்திசாலித்தனம் இருந்தா சுல்பமா சமாளிக்கலாம்

Tenali Raman – The Black Cloak – தெனாலிராமன் – கருப்புப் படைத்தலைவன் தெனாலி PR038 14

கருப்புப் படைத்தலைவன் தெனாலி

காட்சி-01 மன்னர், தெனாலி, வீரர், voice over…வி

VOICE OVER: விஜய நகரத்தில் கடந்த ஒரு மாத காலமாக 

தெனாலிராமனைக் காணவில்லை.. மன்னர் படைகளை அனுப்பி எல்லா இடங்களிலும் தேடச் சொன்னார்.. எங்கும் தெனாலிராமன் அகப்படவில்லை… வெறுங்கையுடன் வந்த வீரர்கள்…

வீரர்: மன்னா… தெனாலி கிடைக்கவில்லை…

மன்னர்: சரி இனி… அவரைத் தேடிப் பயனில்லை… நாட்டில் திருட்டு 

நடக்கும் போது அவர் இருந்தால் உதவியாக இருக்கும் என்று நினைத்தேன்… பரவாயில்லை… நாட்டில் சந்தேகப் படும் நபர்களை கைது செய்து… சிறையில் அடையுங்கள்… 

வீரர்: சரி மன்னா….

Advertisement

VOICE OVER: மன்னர் இங்கு நாட்டைப் பற்றியும், தெனாலியைப் பற்றியும் 

கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில்… 

அண்டை நாட்டு மன்னன், 5 பேர் கொண்ட ஒற்றர் படையை திரட்டி… அதற்கு கருப்பு உடையைக் கொடுத்தான்… 

எப்படியாவது விஜயநகரத்தில், கொள்ளை, கொலைகளை செய்து… மன்னர் தேவராயரை அமைதியிழக்கச் செய்யுமாறு கூறி அனுப்பினான்..

கிருஷ்ணதேவராயரின் படைகள் காட்டில் ரோந்து சுற்றி வந்து கொண்டிருக்கையில்… இந்த 5 கருப்பு உருவங்களும் அங்கே வர, வீரர்களிடம் மாட்டிக் கொண்டனர்… வீரர்கள் அவர்களைப் பிடித்து அரச சபைக்கு இழுத்து வந்தனர்… கிருஷ்ணதேவராயர் கோபத்துடன் அவர்களைப் பார்த்து… 

மன்னர்: அகப்பட்ட பிறகு இவர்களுக்கு முகமூடி எதற்கு… கழட்டி 

எறியுங்கள்.. இந்த துரோகிகளின் முகத்தைப் 

பார்க்கலாம்…தெனாலியா…நீங்கள்… நீங்கள் இந்த கொள்ளைக் கூட்டத்திற்கு தலைவனா 

Advertisement

தெனாலிராமர்: மன்னா நான் காணாமல் போன இந்த ஒரு மாதத்தில் , 

ஜோதிநகரத்து மன்னன் அரண்மனையில், மாறுவேடத்திலிருந்தேன்… நீங்கள் நண்பராக நினைத்த… அந்த மன்னன் உண்மையில் உங்கள் விரோதி மன்னா…கருப்பு ஒற்றர் படையை அனுப்பி… நம் சாம்ராஜ்யத்தையே சீர்குலைக்க திட்டமிட்டான்… என்னை யார் என்று தெரியாமல் இந்த கருப்பு ஒற்றர் படைக்கு தலைவனாக்கினான்… பிறகு நடந்தவைகள் தங்களுக்கு தெரியும்… 

மன்னர்: தெனாலி அண்டை நாட்டுமன்னரின் துரோகத்தைக் 

கண்டுபிடித்து… என்னையும் இந்த நாட்டையும் காப்பாற்றிவிட்டீர்கள்.. இந்த நன்றியை தெரிவிப்பதற்கு  உங்களுக்கு நாலுவேலி நிலத்தை… பரிசாக அளிக்கிறேன்

தெனாலிராமர்: நன்றி மன்னா…

விஷ்ணு கோயிலில் தெனாலி

காட்சி-01 மன்னர், தெனாலி, மந்திரி, voice over…

VOICE OVER: ஒரு சமயம் விஜயநகரத்தின் திருமால்புரம் என்ற 

Advertisement

கிராமத்தில் குளம் வெட்டுவதற்காக பூமியைத் தோண்டினார்கள்…

VOICE OVER: அப்போது அந்த இடத்தில் மிகப்பழமை வாய்ந்த 

விஷ்ணுகோயில் கண்டு ஆச்சரியப் பட்டார்கள்… 

VOICE OVER: குளத்தை வெட்டியவர் மன்னரிடம் சென்று இந்த 

விஷயத்தைக் கூறினார்…

VOICE OVER: தெனாலிராமன் மூத்த அமைச்சர் ஒருவர், ஆகியோரைக் 

கூட்டிக் கொண்டு மன்னர் குளம் வெட்டப் பட்ட இடத்திற்கு வந்தார்…  அங்கு அழகிய விஷ்ணு சிலை இருப்பதையும் அவர் கண்டார்… 

மன்னர்: தெனாலி ராமரே.. இந்த இடத்தில் மிகப்பெரிய ஒரு விஷ்ணு 

Advertisement

ஆலயம் இருந்திருக்க வேண்டும்.. காலப்போக்கில் மண்ணிற்குள்  புதைந்து போயிருக்கிறது… 

தெனாலிராமர்: மன்னா, விஷ்ணு செல்வத்திற்கு அதிபதி… நம் நாட்டில் ஒரு 

பழமையான  விஷ்ணு ஆலயம் கண்டுபிடிக்கப் பட்டது நாட்டில் செல்வம் செழிக்கப் போகிறது என்பதற்கு அறிகுறி மன்னா…

மன்னர்: சரியாகச் சொன்னீர்கள்… 

மந்திரியாரே…

மந்திரி: மன்னா…

மன்னர்: உடனே இந்த இடத்தில் மிகப்பெரிய விஷ்ணு ஆலயத்தை 

கட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்… ஆலயத்தை சுற்றி அருமையான தோட்டம் அமைக்கப்படட்டும்… 

Advertisement

மந்திரி: உத்தரவு மன்னா… 

VOICE OVER: என்ன குழந்தைகளே… எவ்வளவு பெரிய ஆபத்து 

வந்தாலும்… நமக்கு புத்திசாலித்தனம் இருந்தா… சுல்பமா சமாளிக்கலாம்… என்ன புரிஞ்சிகிட்டீங்களா… 

***********************************************************************************************

Continue Reading
Advertisement