Moral Stories - Tamil
Tenali Raman – The Divine Forecast – தெனாலிராமன் – தெனாலியும் போலிச்சாமியாரும்
அரசே என்னை மன்னிச்சிடுங்க… நான் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்தமாதிரி பண்ணிட்டேன்

தெனாலியும் போலிச்சாமியாரும்….
காட்சி-01 மன்னர், தெனாலி, சாமியார்,திருடன், voice over…
VOICE OVER: விஜயநகர சாம்ராஜ்யத்தில் திருட்டும், கொள்ளையும்
அதிகமாக இருந்த நேரம்… மன்னர் மிகுந்த கவலையில் இருந்தார்… இதை ஒழிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியைக் கூறினார்கள்… கடைசியில் மந்திரியார் சொல்படி… இமய மலையில் தவம் இருந்து, தற்போது விஜயநகரத்திற்கு வந்திருக்கும் சுவாமி துன்மானந்தரை அரசர் சந்திக்க, முடிவெடுக்கப் பட்டது…
VOICE OVER: அரசர் தன் பரிவாரங்களுடன், சாமியாரின் ஆசிரமத்திற்குச்
சென்றார்… சாமியார் துன்மானந்தரை வணங்கினார்… சாமியாரோ அரசரின் கண்களையே சிறிது நேரம் உற்று நோக்கி,
சாமியார்: அரசே சரியான நேரத்தில் என்னிடம் வந்துள்ளீர்கள்…
தாமதம் செய்திருந்தால் உங்கள் நாடே அழிந்திருக்கும்…
மன்னர்: சுவாமி நான் இதற்கு என்ன செய்யவேண்டும்…
சாமியார்: அதோ அந்த அறையிலிருந்து கடவுளே உமக்குக் கூறுவார்…
கேளுங்கள்…
அசரீரி: மன்னா நான் கடவுள் பேசுகிறேன்… துன்மானந்தன்
என்னுடைய அருள் பெற்றவன்.. அவனை வணங்கு… அவன் கேட்கும் பொருட்களை தாராளமாக கொடு.. உன் நாட்டில் இருக்கும் கொள்ளை பயம் ஒழியும்…
VOICE OVER: குரலைக் கேட்டு, தெனாலிராமன் சந்தேகத்தோடு அந்த
தியான அறையை நோக்கினார்…
தெனாலிராமன்: மன்னா, நீங்கள் இவருக்கு உதவி செய்யும் முன்… நான்
தியான அறைக்கு சென்று, கடவுளை வேண்டிவிட்டு வருகிறேன்…
VOICE OVER: தெனாலிராமன் தியான அறைக்குள் திடீரென்று
சென்றுவிட, சாமியார் திருதிருவென விழித்தார்…
VOICE OVER: அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் மீண்டும் அசரீரி
கேட்டது…
அசரீரி: மன்னா, மறுபடியும் நான் கடவுள் தான் பேசுகிறேன்…
உங்கள் எதிரே அமர்ந்துள்ள துன்மானந்தன் ஒரு போலிச்சாமியார்… அவனை நம்பாதீர்கள்… அவன் உங்களை ஏமாற்றப் பார்க்கிறான்…
VOICE OVER: மன்னர் திகைத்து நிற்கையில்… தியான அறையிலிருந்து
தெனாலி ராமன் ஒரு திருடனைப் பிடித்து இழுத்து வந்தார்…
தெனாலிராமன்: மன்னா… தியான அறையிலிருந்து அசரீரியாக குரல்
கொடுத்தவன் இவன் தான்… உள்ளே சென்று இவனைக் கையும் களவுமாக பிடித்தேன்… அவனையே இரண்டாவது அசரீரியும் பேச வைத்தேன்…
மன்னர்: ஏய்… சாமியார் வேடத்தில் வந்த நீ யார்? உண்மையைச்
சொல்ல வில்லை என்றால், தலையை வாங்கிவிடுவேன்…
சாமியார்: அரசே என்னை மன்னிச்சிடுங்க… நான் பணத்துக்கு
ஆசைப்பட்டு இந்தமாதிரி பண்ணிட்டேன்…
மன்னர்: இந்த துரோகிகளை கைதுசெய்து சிறையில் அடையுங்கள்…
தெனாலி… உங்களுடைய புத்திசாலித்தனத்தை நான் பாராட்டுகிறேன்… இந்தாருங்கள் என்னுடைய பரிசு….
****************************************************************************************************