Moral Stories - Tamil
Tenali Raman – The Most Valuable Thing – தெனாலிராமன் – தெனாலி தந்த பொக்கிஷம்
எத்தனை சிக்கலான விஷயமா இருந்தாலும் நாம கூர்ந்து கவனிச்சா அதுக்கு நிச்சயமா ஒரு தீர்வு கிடைக்கும்.

தெனாலி தந்த பொக்கிஷம்
காட்சி-01 மன்னர், மந்திரி, voice over…
VOICE OVER: ஒரு முறை ஒரிசா நாட்டின் மேல் படை எடுத்து ,
வெற்றியைக் கண்டார் கிருஷ்ணதேவராயர்… அந்த வெற்றியைக் கொண்டாட விஜயநகரமே திருவிழாக்கோலம் பூண்டது… வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்தனர்… வெற்றி விழாவை கொண்டாட அரச சபைக் கூடியது…
சபையோர்: வட இந்தியாவில் வெற்றிக் கொடி நாட்டிய மன்னர்
கிருஷ்ண தேவராயர்…
சபையோர்: வாழ்க.. வாழ்க..
வாழ்க.. வாழ்க…
வாழ்க.. வாழ்க…
மன்னர்: மந்திரிப் பிரதானிகளே…ஹ.. ஹ..
இன்று நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்… இந்த வெற்றி நமக்கு மறக்க முடியாத வெற்றியாகும்… ஆகையால் இதைக் கொண்டாட வேண்டும்.. என்ன செய்யலாம்..
மந்திரி: மன்னா நம் வெற்றியின் நினைவாக ஊரின் நடுவே.. ஒரு
நினைவுத்தூணை வைக்கலாம்.. அதில் பல சிற்ப வேலைப்பாடுகளை செய்யலாம்…
மன்னர்: மந்திரியார் சொல்வது… மிகவும் நல்ல யோசனை…
இப்போதே… கைதேர்ந்த சிற்பி ஒருவரை விட்டு… நினைவுத்தூணை அமைக்கச் சொல்லுங்கள்..
VOICE OVER: அரசரின் ஆணைப் படி நினைவுத் தூண் அமைக்கும் பணி
மும்முரமாக நடந்தது… சிற்பி இரவு பகலாக தூணின் சிற்பங்களை செதுக்கினார்…
ஒரு நல்ல நாளில், விழாக் கோலத்துடன், நினைவுத்தூணை மன்னர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்…
மன்னர்: மக்களே.. மற்ற மந்திரிப் பிரதானிகளே… இந்த
நினைவுத்தூண் நமது வெற்றியின் அடையாளச் சின்னம்… இதை எல்லோரும் மதிக்க வேண்டும்.. இந்த இடத்தைச் சுற்றிலும்… மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்..
மக்கள்: அப்படியே ஆகட்டும் மன்னா…
மன்னர்: நல்லது… இந்த அருமையான நினைவுத்தூணை கலையழகு
மிளிரச் செய்த… சிற்பி சுந்தர வர்மாவிற்கு… நான் கேட்ட பரிசினைக் கொடுக்கப் போகிறேன்.. சிற்பியே… உங்களுக்கு என்ன வேண்டும்… கேளுங்கள்…
சிற்பி: மன்னா… இந்த சிற்பங்களை செதுக்குவதற்காக தாங்கள்
கொடுத்த வெகுமானமே எனக்குப் போதும்… அதுவே அதிகம்… மேற்கொண்டு பரிசுகளை நான் விரும்பவில்லை..
மன்னர்: அப்படிச் சொல்லாதீர்… என் ஆசைக்காக நீங்கள்
எதையாவது கேட்கத்தான் வேண்டும்…
VOICE OVER: அப்போது சிற்பி சுந்தரவர்மன் ஒரு காலிப் பையை எடுத்து…
அரசரிடம் நீட்டினார்…
சிற்பி: அரசே… இந்த பை நிறைய உலகில் விலை மதிக்கமுடியாத
பொருட்களை நிரப்பித் தாருங்கள்…
மன்னர்: விலைமதிக்க முடியாத பொருட்களா… வைரம், வைடூரியம்
எத்தனை வேண்டுமானாலும் கேளுங்கள்… பை நிறைய தருகிறேன்… உங்கள் கலைத்திறமைக்கு எவையும் ஈடாகாது…
சிற்பி: மன்னா நீங்கள் குறிப்பிட்டவை எல்லாம் இந்த உலகில்
விலைமதிக்கமுடியாத பொருட்கள் அல்ல… அவைகளுக்கு ஒரு விலை உண்டு… ஆனால் நான் கேட்கும் பொருள்… என்னவென்று நீங்களே கண்டுபிடித்து கொடுப்பதானால் நான் பெற்றுக் கொள்கிறேன்….
VOICE OVER: மன்னருக்கு அந்த பொருள் என்னவென்று புரியவில்லை…
மற்ற மந்திரிகளும் தெரியவில்லை என்று கையை விரித்துவிட்டனர்…
மன்னர்: சரி இந்த சிற்பி கேட்கும் விலைமதிப்பில்லாத பொருளைக்
கூற தெனாலிராமர் தான் சரியான ஆள்… அவர் இன்று இங்கு இல்லையே.. ஆகையால் நாளை அரச சபைக்கு வாருங்கள்… அவரை வரசொல்லி.. நீங்கள் கேட்பதை தருகிறேன்..
சிற்பி: நல்லது மன்னா…
தெனாலி தந்த பொக்கிஷம்
காட்சி-03 மன்னர், தெனாலி, மந்திரி, voice over…
VOICE OVER: மறுநாள் ஒரு வீரன் தெனாலிராமன் வீட்டிற்கு சென்றான்…
மன்னருக்கு ஏற்பட்டப் பிரச்சினையைக் கூறி… அரசவைக்கு வருமாறு கூறிச் சென்றான்…
அரச சபையில் மன்னரும்,மற்றவர்களும் சிற்பியும், காத்திருக்க… தெனாலி ராமர் அங்கு வந்தார்…
மன்னர்: தெனாலி ராமரே… இந்த சிற்பிக்கு உலகிலேயே உயர்ந்த
பொருள் வேண்டுமாம்… என்னவென்று நீங்கள் தான் கூறவேண்டும்..
தெனாலிராமர்: நேற்றே இங்கு நடந்தவைகளை வீரன் கூறினான்
அரசே…கவலை வேண்டாம்… இதோ…
சிற்பியே… அந்த பையைக் கொடுங்கள்….
மன்னர்: சிற்பி பையை தெனாலி ராமனிடம் கொடுக்க… தெனாலி
ராமன் அதன் வாயைக் கட்டி…
தெனாலிராமர்: சிற்பியே…இந்தாருங்கள்.. இந்த பைக்குள் நீங்கள் கேட்ட
உலகின் விலைமதிக்க முடியாத பொருட்கள் உள்ளது… பெற்றுக் கொள்ளுங்கள்…
சிற்பி: மிகவும் நன்றி… வருகிறேன் மன்னா…
VOICE OVER: தெனாலி ராமன் கொடுத்த காலிப் பையை பெற்றுக்
கொண்ட சிற்பி… பதில் ஏதும் பேசாமல் அரசவையிலிருந்து சென்றது… மன்னருக்கு வியப்பை அளித்தது…
மன்னர்: தெனாலிராமரே… வைரத்தையும், வைடூரியத்தையும்
வேண்டாம் என்று கூறிய சிற்பி… எப்படி நீங்கள் கொடுத்த வெறும் பையை வாங்கிக் கொண்டு சென்றார்…
தெனாலிராமர்: அது வெறும் பையில்லை மன்னா..
சென்ற இடமெல்லாம் வெற்றிவாகை சூடி, நீதி தவறாமல் ஆட்சி செய்யும், கிருஷ்ணதேவராயர் வாழும் விஜயநகரத்து காற்று நிரம்பிய பை… மன்னா… இந்த உலகத்தில் காற்று இல்லையென்றால் எந்த ஜீவராசியும் இல்லை… அது தான் விலைமதிப்பில்லாத பொருளாக அந்த சிற்பி குறிப்பிட்டிருக்கிறார்…
மன்னர்: தெனாலிராமரே உங்கள் புத்திசாலித்தனத்திற்கு ஈடு
இணையே இல்லை… விஜயநகரம் உங்களை அடைய புண்ணியம் செய்திருக்க வேண்டும்.. இதற்கு தண்டனையாக…
தெனாலிராமர்: மன்னா…
மன்னர்: இனிமேல் ஒருநாள் கூட உங்களுக்கு விடுமுறை
கிடையாது…
தெனாலிராமர்: மன்னா…
மன்னர்: ஆமாம்… நீங்கள் இல்லையென்றால் இந்த அரசசபையில்
ஒரு காரியம் கூட உருப்படியாக நடப்பதில்லையே… நான் என்ன செய்வது…
VOICE OVER: என்ன குழந்தைகளா… எத்தனை சிக்கலான விஷயமா
இருந்தாலும்… நாம கூர்ந்து கவனிச்சா.. அதுக்கு நிச்சயமா ஒரு தீர்வு கிடைக்கும்.. . என்ன தெரிஞ்சுகிட்டீங்களா…
***************************************************************************************************