Connect with us

Moral Stories - Tamil

Tenali Raman – The Power Of Magic – தெனாலிராமன் – ஆற்றை மறைய வைத்த தெனாலி

நம்மள நம்பி இருக்கறவங்களுக்கு நாம எப்பவுமே துரோகம் செய்யவே கூடாது அப்படி செஞ்சா இதோ இப்படி தான் மாட்டிக்குவோம்

ஆற்றை மறைய வைத்த தெனாலி

காட்சி-01 மன்னர், தெனாலி, மந்திரி, voice over…

VOICE OVER: கோடைகாலம் தொடங்கிவிட்டிருந்த சமயம்… 

கிருஷ்ணதேவராயரின் அரச சபை கூடியது… 

தெனாலிராமர்: மன்னா… நான் என் கிராமத்திற்கு சென்று சிலநாட்கள் 

தங்கிவிட்டு வர விரும்புகிறேன்… என்னை அனுமதிக்க வேண்டும் மன்னா.. 

மன்னர்: நீர் சென்றுவர நான் அனுமதிக்கிறேன்… ஆனால் விரைவில் 

நீங்கள் திரும்பி விட வேண்டும்.. 

Advertisement

தெனாலிராமர்: எனக்கு 15 நாட்கள் விடுமுறை அளியுங்கள் மன்னா…. 

போதும்…

மன்னர்: சரி… ஆகட்டும்… 15 நாட்களுக்கு மேல் தங்கி விடாதீர்கள்…. 

அரச சபையில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நேரத்தில் நீங்கள் என் அருகில் இருப்பதையே நான் விரும்புகிறேன்

தெனாலிராமர்: வந்து விடுகிறேன் மன்னா…  மிக்க நன்றி…

ஆற்றை மறைய வைத்த தெனாலி

காட்சி-02 மன்னர், தெனாலி, மந்திரி, voice over…

VOICE OVER: 15 நாட்கள் ஓடின… ஆனால் தெனாலிராமன் 

Advertisement

திரும்பவே இல்லை… மன்னர் மிகவும் வருத்தப் பட்டார்… தெனாலி ராமனைப் பற்றி விசாரித்து வரச் சொன்னார்…

அதற்குள் அங்குள்ள அமைச்சர்கள் தெனாலிராமனைப் பற்றி… தவறாக பேசி மன்னரைக் குழப்பிக் கொண்டிருந்தனர்… ஒரு மாதத்திற்கு பிறகு தெனாலிராமன் அரச சபைக்கு வந்தார்…

தெனாலிராமர்: மன்னருக்கு என் வணக்கங்கள்… 

மன்னர்: தெனாலி 15 நாட்களில் வருவதாக கூறிவிட்டு… இத்தனை 

நாட்கள் உங்கள் கிராமத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்…

தெனாலிராமர்: மன்னா… நான் என் விடுமுறையில் ஒருவரிடம் 

சென்று மாயவித்தைகளைக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன் மன்னா… 

மன்னர்: அப்படி என்ன வித்தையைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்… 

Advertisement

தெனாலிராமர்: இது ஒரு அற்புதமான வித்தை… இதன் மூலம் 

கிணறுகளையும், கால்வாய்களையும் மறையச் செய்ய முடியும்… 

சபையோர்: ஹ… ஹ… ஹா….

ஹ… ஹ… ஹா….

மன்னர்: தெனாலி என்ன உளறுகிறீர்… கிணறுகளையும், 

கால்வாய்களையும் மறைய வைக்க எங்காவது முடியுமா..

தெனாலிராமன்: முடியும் மன்னா…  நீங்கள் அனைவரும் என்னுடன் 

வருவதாக இருந்தால்… நான் அதை நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன்… 

Advertisement

மன்னர்: நாளை நாங்கள் அனைவரும் உங்களுடன் வருகிறோம்.. 

தெனாலிராமன்: அப்படியே ஆகட்டும் மன்னா… 

ஆற்றை மறைய வைத்த தெனாலி

காட்சி-03 மன்னர், தெனாலி, மந்திரி, voice over…

VOICE OVER: அடுத்தநாள் தெனாலிராமன் அனைவரையும், விஜயநகரின் 

முக்கிய இடங்களில் இருந்து… தள்ளி இருக்கும் ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்றான்… 

தெனாலிராமர்: மன்னா… இதோ பாருங்கள்… இந்த கிராமத்தில்… மொத்தம் 

ஏழு கால்வாய்கள் வெட்டியதாக… அமைச்சர் கணக்கு காட்டியுள்ளார்..  நான் நான்கினை மறையச் செய்து விட்டேன்… இப்போது வெறும் மூன்று கால்வாய்களே உள்ளன…வேண்டுமென்றால் நம் அமைச்சரிடமே 

Advertisement

இங்கு எத்தனைக் கால்வாய்கள் வெட்டப் பட்டன என்று கேட்டுப் பாருங்களேன்… 

VOICE OVER: தெனாலி அமைச்சரின் ஊழலை சுட்டிக்காட்டுவதை 

மன்னர் புரிந்து கொண்டார்… அமைச்சர் தலையை குனிந்து கொண்டார்… 

மன்னர்: அமைச்சரே… நீங்கள் கால்வாய்கள் கட்டுவதிலும், கிணறு 

வெட்டுவதிலும்.. மக்களை மட்டும் ஏமாற்றவில்லை… சிறிதும் ராஜவிசுவாசம் இன்றி  என்னையே ஏமாற்றி விட்டீர்கள்…யார் அங்கே… இவரைக் கைது செய்து சிறையில் அடையுங்கள்… 

தெனாலிராமர்: மன்னா… முக்கிய நகரங்களில் மட்டும் கால்வாயை 

ஒழுங்காக கட்டி விட்டு.. கிராமங்களில் கால்வாய் கட்டுவதில் அமைச்சர் நிறைய ஏமாற்று  ஊழல் செய்திருக்கிறார்… இதனை கண்டுபிடிக்கவே… நான் கிராமங்களுக்கு சென்று சோதனை செய்து வந்தேன்… அதனால் தான் என்னால் 15 நாட்களில் வரமுடியவில்லை மன்னா… 

மன்னர்: நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள் தெனாலி ராமரே…. 

Advertisement

இப்போதே அந்த கிராமங்களில் கால்வாய்கள் வெட்ட ஆணையிடுகிறேன்…  இந்த தவற்றைக் கண்டுபிடித்து கூறியமைக்கு… உங்களுக்கு 1000 பொற்காசுகளை இனாமாக தருகிறேன்… 

தெனாலிராமர்: நன்றி மன்னா…

VOICE OVER: என்ன குழந்தைகளே… நம்மள நம்பி இருக்கறவங்களுக்கு.. 

நாம எப்பவுமே துரோகம் செய்யவே கூடாது…  அப்படி செஞ்சா இதோ… இப்படி தான் மாட்டிக்குவோம்… என்ன புரிஞ்சிக்கிட்டீங்களா…

***************************************************************************************************

Continue Reading
Advertisement