Connect with us

Moral Stories - Tamil

Tenali Raman – The Precious Box – தெனாலிராமன் – தெனாலியும் தங்கப் பெட்டியும்

எப்பவுமே பதவியில இருக்கிறவங்க அவங்களோட அதிகாரத்தை தவறா பயன்படுத்தவே கூடாது… அப்படி செஞ்சா இதோ இந்த அதிகாரிக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவங்களுக்கும் ஏற்படும்

Tenali Raman – The Precious Box – தெனாலிராமன் – தெனாலியும் தங்கப் பெட்டியும் PR038 03

தெனாலியும் தங்கப் பெட்டியும்

காட்சி-01 மன்னர், தெனாலி, voice over…

VOICE OVER: ஒருநாள் கிருஷ்ணதேவராயரின் அரச சபைக்கு… கையில்

அழகிய தங்கப் பெட்டியுடன் தெனாலி ராமன் வந்தார்… பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும்… கற்களும், முத்துக்களும் பதித்த அந்த பெட்டி…மிகவும் அழகாக இருந்தது…

அரசர் அதன் அழகைப் பார்த்து ஆச்சர்யப் பட்டார்…

மன்னர்: தெனாலி… இந்த பெட்டி மிகவும் அழகாக இருக்கிறதே…

எங்கு வாங்கினீர்கள்…

தெனாலிராமர்: வாங்கவில்லை மன்னா… அன்பளிப்பாக கிடைத்தது…

Advertisement

மன்னர்: இவ்வளவு விலை உயர்ந்த பெட்டியை எந்த நாட்டு மன்னர்

உங்களுக்குத் தந்தார்…

தெனாலிராமர்: மன்னர் இல்லை… இந்த நாட்டில் வாழும் ஒரு அதிகாரி…

அதுவும் சாதாரண வரி வசூல் செய்யும் அதிகாரி…

மன்னர்: என்னது… சாதாரண வரி வசூல் செய்யும் அதிகாரியா…

அவருக்கு ஏது இத்தனை பணம்….

தெனாலிராமர் : எனக்கு மட்டும் தரவில்லை மன்னா… மந்திரிகள்,

படைத்தளபதிகள், மற்றும் உயரதிகாரிகள் அனைவருக்கும், அவர் வீட்டுக் கல்யாணத்தில் இது போன்ற பெட்டி வழங்கப் பட்டது…

Advertisement

மன்னர்: அவர் எதற்காக அரண்மனையில் உள்ளவர்களுக்கு

தரவேண்டும்…

தெனாலிராமர்: மக்களிடம் அதிகமாக அந்த அதிகாரி வரிப்பணம்

வசூலிக்கிறாராம்… அதை இந்த அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்கவேண்டுமாம்… தட்டிக் கேட்கும் மக்களிடம் தன் செல்வாக்கை சொல்லி மிரட்டுகிறாராம் மன்னா…

மன்னர்: என்ன அக்கிரமம்… தெனாலி… நாளையே அந்த

அதிகாரியை மாறுவேடத்தில் சந்திப்போம்… நீர் சொல்வது பொய்யாக இருந்தால், தண்டனை உங்களுக்குத் தான்…

தெனாலிராமர்: ஒவ்வொரு முறையும் நீங்கள் இப்படித்தான்

சொல்கிறீர்கள்… ஆனால் பரிசுகள் தான் தருகிறீர்கள்… வாருங்கள்…

Advertisement

தெனாலியும் தங்கப் பெட்டியும்

காட்சி-02 மன்னர், தெனாலி, வரி வசூலிப்பவன், மக்கள்voice over…

VOICE OVER: ஒருநாள் மாறுவேடத்தில், மன்னரும், தெனாலிராமரும்,

வரிவசூல் செய்யும் அதிகாரி நிற்கும் இடத்திற்கு சென்றனர்…

வரி வசூலிப்பவன்: ம். சீக்கிரம்… 10 பவுன் கொடுங்கள்..

ஆள்1: ஐயா… 5 பவுன் தானே வரி செலுத்த வேண்டும்… நீங்கள் 10

பவுன் கேட்கின்றீர்களே..

வரி வசூலிப்பவன்: ம்.. என்னையே கேள்விக் கேட்கும் அளவிற்கு

Advertisement

உங்களுக்கு தைரியம் வந்து விட்டதா… 5 பவுன் அதிகமாக கொடுக்கா

விட்டால்.. வேறு ஏதாவது குற்றத்தில் உங்களை சிறையில் அடைப்பேன்… ம்.. சீக்கிரம்… பணத்தைக் கொடுத்து விட்டு நகருங்கள்…

ஆள்1: இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க எந்த அமைச்சரும்

கிடையாதா…

வரி வசூலிப்பவன்: ம்.. அமைச்சருக்கும் பங்கு போகுது… ஏதாவது

பேசின… அப்புறம் உனக்கு தான்யா ஆபத்து… ஐந்து பவுனுக்காக ஐந்து வருடம் உள்ள போயிடுவ… போ..போ…

VOICE OVER: அந்த அதிகாரி மக்களை துன்புறுத்தி… வரிவசூல்

செய்வதை, தெனாலிராமனும், அரசரும் பார்த்துக் கொண்டு இருந்தனர்…பிறகு அந்த அதிகாரியிடம் சென்றனர்…

Advertisement

வரி வசூலிப்பவன்: என்ன நீங்கள் மட்டும் வரிசையில் வராமல் குறுக்கே

வருகிறீர்கள்… ஒழுங்கு தான் மக்களுக்கு அவசியம்…

மன்னர்: ஐயா… அரசாங்கமே ஒழுங்காக நடக்காத போது…

மக்களுக்கு மட்டும் எப்படி ஒழுக்கம் வரும்…

வரி வசூலிப்பவன்: யாரது… இப்படி கொழுப்புடன் பேசும் நீ… 15 பவுன் தர

வேண்டும்… இல்லை என்றால் சிறைச் சாலைதான்… ம்..

மன்னர்: நான் யார் தெரியுமா…

வரி வசூலிப்பவன்: யாராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை… எடு

Advertisement

பணத்தை…

வரி வசூலிப்பவன்: அரசே என்னை மன்னித்து விடுங்கள்… தெரியாமல்

தவறு செய்துவிட்டேன்..

தெனாலிராமர்: நீ தெரியாமல் தவறு செய்யவில்லை… அதிகாரம் கையில்

இருக்கிறது என்ற ஆணவத்தில் செய்துள்ளீர்கள்…

மன்னர்: யாரை வேண்டுமானாலும் மன்னிப்பேன்.. மக்களைக் காக்க

வேண்டிய அதிகாரிகளே தவறு செய்தால் மன்னிப்பே கிடையாது… யாரங்கே… இந்த அதிகாரியை சிறையில் அடையுங்கள்…

VOICE OVER: மன்னர் தான் அணிந்திருந்த முத்து மாலையைக் கழட்டி…

Advertisement

தெனாலி ராமனுக்கு அணிவித்து… அவரைப் பாராட்டினார்…

VOICE OVER: என்ன குழந்தைகளே.. எப்பவுமே பதவியில இருக்கிறவங்க…

அவங்களோட அதிகாரத்தை தவறா பயன்படுத்தவே கூடாது… அப்படி செஞ்சா… இதோ இந்த அதிகாரிக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவங்களுக்கும் ஏற்படும்… என்ன புரிஞ்சிகிட்டீங்க இல்ல..

********************************************************************************************************

Continue Reading
Advertisement