Connect with us

Moral Stories - Tamil

Tenali Raman – The Proof Of Innocence – தெனாலிராமன் – நேர்மைக்குக் கிடைத்த சாட்சி

நாம நல்லவங்களா இருந்தா நமக்கு எப்பவுமே நல்லதே தான் கிடைக்கும்

நேர்மைக்குக் கிடைத்த சாட்சி….

காட்சி-01 மன்னர், தெனாலி, VOICE OVER..

VOICE OVER: கிருஷ்ணதேவராயரின் அவையிலிருக்கும் அனைவருக்கும் 

தெனாலிராமனின் திறமையைப் பார்த்து பொறாமையாக இருந்தது… எப்படியாவது தெனாலிராமனை விட நல்லபெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்… அவரைப் பற்றி இல்லாத விஷயங்களை திரித்துக் கூற ஆரம்பித்தனர்…

VOICE OVER மன்னருக்கு தெனாலியின் மேல் சந்தேகமே வரவில்லை… 

ஆனால் திரும்பத் திரும்ப பொய்யைக் கூறினாலும் அது உண்மையாகி விடுவது போல ஒருநாள் மன்னருக்கும் சந்தேகம் வந்துவிட்டது… 

மன்னர்: தெனாலி.. நீ மக்களிடம் ஏமாற்றி, நிறைய லஞ்சம் 

வாங்குவதாக… நிறையப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்… 

Advertisement

தெனாலி: மன்னா… நீங்கள் அதை நம்புகிறீர்களா… 

மன்னர்: ஆம்… நீர் இல்லையென்று மறுத்தால் நிரூபியுங்கள்… 

காட்சி-02 மன்னர், தெனாலி, VOICE OVER

VOICE OVER: மறுநாள் சபை கூடியதும், காவலாளி ஒருவன் ஒரு 

ஓலையைக் கொண்டுவந்து, மன்னரிடம் கொடுத்தான்….

தெனாலிராமன்:

(ஓலையில்) மன்னா, என் வணக்கம்.. இந்த அரச சபையில் நான் பல 

ஆண்டுகள் உண்மையாக தொண்டு புரிந்து வருகிறேன்… எதற்கும் ஆசைப் பட்டதில்லை…  இப்படிப் பட்ட ஒரு பழியை சுமந்ததில்லை… நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை மன்னா… 

Advertisement

மன்னர்: ஆகா… ஐயோ… தெனாலி நம்மையெல்லாம் விட்டுவிட்டு 

மேல் உலகம் சென்று விட்டார்… 

ராஜகுரு: தெனாலி மிகவும் நல்லவர்… பண்பாளர்… அவரை சந்தேகப் 

பட்டது மிகவும் தவறு..  

VOICE OVER: ராஜகுரு இவ்வாறு கூறியதும்… சபையில் உள்ள 

மற்றவர்களும் தெனாலியைப் புகழ்ந்து தள்ளினார்கள்… இதைக் கூட்டத்தில் மாறுவேடத்தில் நின்று கொண்டிருந்த தெனாலி பார்த்தார்… 

தெனாலிராமன்: மன்னா வணக்கம்…. 

மன்னர்: தெனாலி… தெனாலி… நீ வந்து விட்டாயா..  

Advertisement

தெனாலிராமன்: ஆம் மன்னா.. இங்கு சபையில் எல்லோரும் என்னை 

புகழ்ந்து பேசினார்கள்… இதைவிட என்னுடைய நேர்மைக்கு என்ன சான்று வேண்டும்… 

மன்னர்: தெனாலிராமனே நீங்கள் உத்தமமானவர்.. நான் தான் 

வீணாக கேட்பார் பேச்சை கேட்டு விட்டேன்… 

VOICE OVER: தெனாலிராமன் மகிழ்ச்சியுடன் மன்னரை 

வணங்கியவுடன்… அவர் மேல் பழி சொன்ன மந்திரியார் தலையைக் குனிந்து கொண்டார்…  

VOICE OVER: என்ன குழந்தைகளே… நாம நல்லவங்களா இருந்தா… நமக்கு 

எப்பவுமே நல்லதே தான் கிடைக்கும்… தெரிஞ்சிகிட்டீங்களா… 

Advertisement

*********************************************************************************************************

Continue Reading
Advertisement