Moral Stories - Tamil
Tenali Raman – The Real Decoration – தெனாலிராமன் – விஷ்ணு கோயிலில் தெனாலி
ஒரு சின்னப் பொருள் கூட சில இடத்துல பெரிசா பேசப்படும் மூலிகை குணம் உள்ள இந்த அருமையான துளசி செடிய நம்ம வீட்டுலயும் வளர்த்து நாம எல்லாம் பயன் அடையணும்

விஷ்ணு கோயிலில் தெனாலி
காட்சி-01 மன்னர், தெனாலி, மந்திரி, voice over..
ஒரு சமயம் விஜயநகரத்தின் திருமால்புரம் என்ற கிராமத்தில் குளம் வெட்டுவதற்காக பூமியைத் தோண்டினார்கள்…
அப்போது அந்த இடத்தில் மிகப்பழமை வாய்ந்த விஷ்ணுகோயில் கண்டு ஆச்சரியப் பட்டார்கள்…
குளத்தை வெட்டியவர் மன்னரிடம் சென்று இந்த விஷயத்தைக் கூறினார்…
தெனாலிராமன் மூத்த அமைச்சர் ஒருவர், ஆகியோரைக் கூட்டிக் கொண்டு மன்னர் குளம் வெட்டப் பட்ட இடத்திற்கு வந்தார்… அங்கு அழகிய விஷ்ணு சிலை இருப்பதையும் அவர் கண்டார்…
தெனாலி ராமரே.. இந்த இடத்தில் மிகப்பெரிய ஒரு விஷ்ணு ஆலயம் இருந்திருக்க வேண்டும்.. காலப்போக்கில் மண்ணிற்குள் புதைந்து போயிருக்கிறது…
மன்னா, விஷ்ணு செல்வத்திற்கு அதிபதி… நம் நாட்டில் ஒரு பழமையான விஷ்ணு ஆலயம் கண்டுபிடிக்கப் பட்டது நாட்டில் செல்வம் செழிக்கப் போகிறது என்பதற்கு அறிகுறி மன்னா…
சரியாகச் சொன்னீர்கள்…
மந்திரியாரே…
மன்னா…
உடனே இந்த இடத்தில் மிகப்பெரிய விஷ்ணு ஆலயத்தை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்… ஆலயத்தை சுற்றி அருமையான தோட்டம் அமைக்கப்படட்டும்…
உத்தரவு மன்னா
காட்சி-02 மன்னர், தெனாலி, அமைச்சர்கள், voice over…
கிருஷ்ண தேவராயரின் உத்தரவுப் படி கோவிலைக் கட்ட ஆரம்பித்தார்கள்… கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாரானது…
மன்னர் கிருஷ்ண தேவராயர், கோவிலின் வேலைகளைப் பார்வையிட ஒருநாள்
தெனாலிராமனுடன் வந்தார்… கூடவே மூத்த அமைச்சரும் வந்திருந்தார்… மன்னர் கோவிலையும், தோட்டத்தையும் சுற்றிப்பார்த்தார்….
கோவில் சிறப்பாக இருக்கிறது… ஆனால் தோட்டம் சரியாக அமைய வில்லையே…
இதோ இருக்கிறதே… மன்னா…ரோஜா, அரளி,முல்லை, சாமந்தி போன்ற மலர்களும், இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடிய மா,பலா,வாழை போன்ற கனிவகைகளும், நடப்பட்டுள்ளது மன்னா…
ஆயிரம் இருந்தாலும்… நான் விரும்பும் தோட்டம் எங்கே… அதைக் காணவில்லையே…
மன்னரின் விருப்பம் என்ன என்று மந்திரியாருக்கு புரியவே இல்லை…. தலையை சொரிந்தார்… உடனே தெனாலி ராமன் குறுக்கிட்டு….
அரசே… நீங்கள் விரும்பும் தோட்டத்தை கோவிலின் இன்னொரு பகுதியில் வளர்க்க ஏற்பாடு செய்துள்ளேன்… என்னுடன் வாருங்கள் காட்டுகிறேன்…
தெனாலி ராமனை அரசர் பின் தொடர, அவர் பின்னால் எல்லோரும் சென்றார்கள்…
தெனாலி ராமன் காட்டிய இடத்தில், ஒரு தொட்டியில் துளசிச் செடி வளர்க்கப்பட்டு இருந்தது… அதைப் பார்த்ததும் அரசர் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்….
தெனாலி… நீர் மிகவும் புத்திசாலி… ஒரு விஷ்ணுகோவிலுக்கு மிகவும் முக்கியமான தோட்டம் துளசிச்செடிதான்… அதை நான் சொல்லாமலே நீங்களே புரிந்து கொண்டு… வளர்த்துள்ளீர்கள்… உங்களுக்குப் பாராட்டுக்கள்…
நன்றி மன்னா… இது என் கடமை…
சாதாரணமான இந்த விஷயம் தனக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று மந்திரியார் தலைகுனிந்தார்….
என்ன குழந்தைகளே… ஒரு சின்னப் பொருள் கூட சில இடத்துல பெரிசா பேசப்படும்… மூலிகை குணம் உள்ள இந்த அருமையான துளசி செடிய நம்ம வீட்டுலயும் வளர்த்து நாம எல்லாம் பயன் அடையணும்… என்ன வளர்ப்பீங்களா…
*****************************************************************************************************