Moral Stories - Tamil
Tenali Raman – The Root Of Rasagulla – தெனாலிராமன் – ரசகுல்லாவின் வேர்
நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வந்து எது கேட்டாலும், நாம பதட்டப் படாம, சமயோசிதமா சமாளிக்கறது மூலமா நாம நல்ல பேர் வாங்கலாம்

ரசகுல்லாவின் வேர்
காட்சி-01 மன்னர், வியாபாரி, சமையற்காரர், voice over…
VOICE OVER: ஒருமுறை விஜயநகரத்திற்கு ஈரான் நாட்டு வியாபாரி
ஒருவர் மன்னரைப் பார்க்க வந்தார்… மன்னர் அவரை அன்புடன் வரவேற்றார்…
மன்னர்: வியாபாரியே… உங்கள் வருகை இந்த நாட்டிற்குப் பயன்
படட்டும்… நீங்கள் இங்கு எங்கள் விருந்தினராக தங்கியிருந்து, எங்கள் நாட்டின் வளங்களைப் பார்வையிடுவதுடன், எங்கள் உணவு வகைகளையும் சுவைத்து மகிழ வேண்டும்…
வியாபாரி: அப்படியே ஆகட்டும் மன்னா….
மன்னர்: மந்திரியாரே… இந்த வியாபாரி தங்குவதற்கு எல்லா
ஏற்பாடுகளையும் செய்து கொடுங்கள்…
மந்திரி: ஆகட்டும் மன்னா….
VOICE OVER: விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த வியாபாரிக்கு,
வகைவகையான உணவுவகைகளை அரண்மனை சமையற்காரர், சமைத்து வழங்கினார்… வியாபாரியும் எல்லாவற்றையும் சுவைத்து மகிழ்ந்தார்…
VOICE OVER: அப்போது சமையற்காரர் கையில் ஒரு பாத்திரத்தை எடுத்து
வந்தார்….
சமையற்காரர்: ஐயா.. இது ரசகுல்லா எனப்படும் சுவையான இனிப்பு
வகை… அரண்மனையில் மன்னர் விரும்பி சுவைக்கும் இனிப்பு… இதை தங்களுக்காக தனிப்பட்ட கவனமெடுத்து தயாரித்து உள்ளேன்… சாப்பிட்டுப் பாருங்கள்….
வியாபாரி: எனக்கு இந்த ரசகுல்லா வேண்டாம்… ரசகுல்லாவின் வேர்
இருந்தால் குடுங்க… விரும்பி சாப்பிடுவேன்…
VOICE OVER: சமையற்காரருக்கு ரசகுல்லாவின் வேர் என்றால் ஒன்றுமே
புரியவில்லை… திருதிருவென்று விழித்தார்…
மன்னர் அரண்மனையில் தனிமையில் இருக்கும்போது நடந்தவைகளைக் கூறினார்…
மன்னர்: என்னது… ரசகுல்லாவின் வேரா… இதுவரை என்
வாழ்நாளில் இப்படி ஒரு பொருளை நான் கேள்விப்பட்டதுமில்லை… பார்த்ததுமில்லையே…
சமையற்காரர்: அது தான் எனக்கும் புரியவில்லை…
மன்னர்: அந்த வியாபாரி நம் விருந்தினர்… மரியாதைக்குரியவர்…
அவர் கேட்கும் பொருளை கொடுப்பது தான் நமது நாட்டிற்குப் பெருமை… சரி நீங்கள் செல்லுங்கள்… நான் அரச சபையில் யாருக்காவது இதைப்பற்றி தெரியுமா என்று விசாரிக்கிறேன்…
ரசகுல்லாவின் வேர்
காட்சி-02 மன்னர், தெனாலி, தளபதி, ஒருவன், voice over…
VOICE OVER: மறு நாள் அரச சபை கூடியது…
மன்னர்: சபையோர்களே… உங்களுக்கு யாருக்கேனும்,
ரசகுல்லாவின் வேர் எங்கு கிடைக்கும் என்று தெரியுமா…
சபையோர்: ஹ…ஹ… ஹ…..
ஹ…ஹ… ஹ…..
மன்னர்: ஏன் சிரிக்கிறீர்கள்…
நம் விருந்தினர் ஒருவர் அதைச் சாப்பிட ஆவலாக உள்ளார்… உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்…
ஒருவன்: மன்னா… ரசகுல்லாவிற்கு ஏது வேர்… இது ஏதோ சதி என்று
நினைக்கிறேன்…
மன்னர்: உங்களுக்கு தெரியாவிட்டால் சதி என்று கூறிவிடுகிறீர்கள்…
என்ன தெனாலிராமரே.. உங்களுக்குக் கூடவா தெரியவில்லை…
தெனாலிராமன்: தெரியும் மன்னா… ரசகுல்லாவின் வேர் இருக்கிறது… நான்
அதை பார்த்திருக்கிறேன்…
ஒருவன்: தெனாலி… பொய் சொல்லுவதிலும் ஒரு அளவு வேண்டும்…
நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது…
தெனாலிராமன்: ரசகுல்லாவின் வேரை என்னால் கொண்டுவரமுடியும்…
நாளையே அதை அந்த வியாபாரிக்குத் தந்து சாப்பிட வைக்கிறேன்… அதற்காக எனக்கொரு வெள்ளிக்கிண்ணமும், நல்ல கத்தியும் தாருங்கள் மன்னா…
மன்னர்: அப்படியே தருகிறேன்… ஆனால் அந்த புதுமையான
ரசகுல்லாவின் வேரை நாங்களும் பார்க்க ஆவலாக உள்ளோம்… நாளை அந்த வியாபாரியை அரச சபைக்கே வரவழைத்து, ரசகுல்லாவின் வேரை சாப்பிடவைப்போம்..
தெனாலிராமன்: அப்படியே மன்னா…
ஒருவன்: தளபதியாரே… இந்த தெனாலிக்கு… பைத்தியம் தான்
பிடித்து விட்டது… இந்த மன்னரும் அவருடன் சேர்ந்து… விநோதமாக நடந்து கொள்கிறார்…
தளபதி: நமக்கென்ன ரசகுல்லாவின் வேர் கிடைக்கவில்லை
என்றால்… தெனாலி தானே அவமானப்பட போகிறார்…
காட்சி-03 மன்னர், தெனாலி, வியாபாரி, voice over…
VOICE OVER: மறுநாள் அரச சபை கூடியது… மன்னர் அந்த வியாபாரியை
கூட்டிக்கொண்டு வந்து தன் சிம்மாசனத்தில் அமர்ந்தார்… அப்போது தெனாலிராமன் கையில் கிண்ணத்துடன் உள்ளே நுழைந்தார்… அந்த கிண்ணம் ஒரு பட்டுத்துணியால் மூடப்பட்டு இருந்தது…
மன்னர்: தெனாலிராமரே… எங்கே ரசகுல்லாவின் வேரை எனக்கு
முதலில் காட்டுங்கள் பார்க்கலாம்…
தெனாலிராமர்: மன்னிக்க வேண்டும் மன்னா.. இதை முதலில் நம்
விருந்தினர் தான் பார்த்து உண்ண வேண்டும்…
VOICE OVER: தெனாலி அந்த பாத்திரத்தின் துணியை எடுத்துவிட்டு…
வியாபாரியிடம் நீட்ட… அதில் துண்டாக வெட்டப்பட்ட கரும்பு இருந்தது…
VOICE OVER: அதை அந்த வியாபாரி எடுத்து, சுவைத்து சாப்பிட்டார்…
வியாபாரி: ஆஹா.. என்ன அருமையான ரசகுல்லா வேர்… நம்பள்
இதான் கேட்டது….
VOICE OVER: தெனாலி கரும்பு துண்டுகளையா ரசகுல்லாவின் வேர் என்று
கொடுத்தீர்…
தெனாலிராமன்: ஆம் மன்னா… எல்லா இனிப்புகளும் எதனால்
செய்யப்படுகிறது… சர்க்கரையிலிருந்து… சர்க்கரை கரும்பில் இருந்து வருகிறது… வேர் என்றால் மூலம்… இனிப்பு பண்டமான ரசகுல்லாவிற்கு வேர் கரும்புதானே…
மன்னர்: ஹ… ஹ… ஹ… சபாஷ்… தெனாலி உங்கள் புத்தி
கூர்மையை மெச்சுகிறேன்… சமயோசிதமாக செயல்பட்டு, வியாபாரியையும் திருப்திப் படுத்தி, நாட்டின் பெருமையையும் காப்பாற்றினீர்கள்…
VOICE OVER: என்ன குழந்தைகளே… நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வந்து
எது கேட்டாலும், நாம பதட்டப் படாம, சமயோசிதமா சமாளிக்கறது மூலமா நாம நல்ல பேர் வாங்கலாம்… என்ன தெர்
*******************************************************************************************************