Moral Stories - Tamil
Tenali Raman – The Roses – தெனாலிராமன் – ரோஜா தோட்டத்தில் தெனாலி
பொழுது போக்குக்காக நாம எங்கயாவது போனாக்கூட நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு நாம கண்டிப்பா கவனிக்கனும்

ரோஜா தோட்டத்தில் தெனாலி
காட்சி-01 மன்னர், மந்திரி, voice over…
VOICE OVER: அது ஒரு வசந்த காலம்… விஜய நகர சாம்ராஜ்யமே..
வண்ண வண்ண மலர்களால் பூத்துக் குலுங்கியது… ஆறுகளிலும் ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பி வழிந்தது… அழகான நீர்வீழ்ச்சி.. பசுமையான பழத்தோட்டங்கள்… அவைகளை நாடிவரும் அயல்நாட்டுப் பறவைகள்… என வசந்தகாலத்தில் விஜயநகர மக்கள்…இயற்கையை மகிழ்ச்சியாக அனுபவித்தார்கள்..
அரச சபையில் நாட்டில் நிகழும் பருவகாலத்தைப் பற்றியும், நல்ல சூழ்நிலைப் பற்றியும், பேச்சு வந்தது…
மந்திரி: அரசே… இயற்கை அன்னை நம் நாட்டையே அழகு படுத்தி
உள்ளார்… ஆகையால் காடுகளில் நாம் குதிரை சவாரி செய்து மகிழ்வோம்…
மன்னர்: நானும் அதைத்தான் நினைத்தேன்…. இயற்கையின் எழிலை
ரசிக்கத்தான் ஆண்டவன் நமக்கு கண்களையே தந்துள்ளான்… வழக்கம் போல நாளை காலை நாம் புறப்படுவோம்…
ரோஜா தோட்டத்தில் தெனாலி
காட்சி-02 மன்னர், தெனாலிராமன், மந்திரிகள், voice over…
VOICE OVER: மறுநாள் மன்னர், மந்திரி, மற்றும் சில வீரர்களுடன்
இயற்கையை ரசித்தபடி குதிரையில் வந்து கொண்டிருந்தார்…
மன்னருடன் வந்த தெனாலிராமனோ எதைப்பற்றியும் பேசாமல் மௌனமாக வந்தார்..
வழியில் ஒரு பெரிய ஆலமரமும், அதைச் சுற்றி மிகப் பெரிய ரோஜாக் கூட்டத்தையும் பார்த்த மன்னர்.. குதிரையை விட்டு இறங்கி ரோஜா மலர்களின் அழகை ரசித்தார்… அவருக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது…
மன்னர்: இந்த அழகிய ரோஜா மலர்கள் நமக்கு எதைக் கூறுகின்றன…
யாருக்காவது தெரியுமா…
மந்திரி1 :சந்தேகம் என்ன மன்னா… இவைகளின் நறுமணம் இந்தக் காட்டில்
பரவுவதைப் போல… உங்களின் புகழும் திறமையும், நாட்டில் பரவுகிறது என்பதை… இந்த ரோஜாக் கூட்டங்கள் நமக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கின்றன…
மந்திரி2: ஆம் மன்னா… இந்த மலர்களின் மென்மை.. உங்களின்
இதயத்தைப் போன்றது.. தங்களின் வள்ளல் தன்மையால் தான் நாட்டிற்கு இத்தகைய மலர்கள்… பூத்துக் குலுங்குகின்றன
VOICE OVER: எல்லோரும் ஆளுக்கு ஆள் மன்னரைப் புகழ… மன்னர்
மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்… தெனாலி ராமனை கவனித்தார்… தெனாலி ராமன் மட்டும் ஒன்றுமே பேசாமல்… கையைக் கட்டிய படி ரோஜா மலரின் அழகை ரசித்தார்…
மன்னர்: என்ன தெனாலி ராமரே.. பேசாமல் இருக்கிறீர்கள்…
மந்திரி2: மன்னா தெனாலிராமனுக்கு நீங்கள் புகழடைவதில் பொறாமை
போலும் அதனால் தான் வாயைத் திறக்க வில்லை.. ஹ… ஹ… ஹ…
தெனாலிராமன்: இல்லை மன்னா.. என்னாலும் இந்த இயற்கை அளித்த இந்த
பூக்களின் அழகை ரசிக்க முடியும்… உங்களின் புகழை கவிதையாக பாடமுடியும்… ஆனால் அழகிய இந்த ரோஜாக்களின் இடையே முட்களும் உள்ளன…. அதை கவனித்தீர்களா…
மன்னர்: தெனாலி தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்…
தெனாலிராமன்: ஏய்… தெனாலி.. தெனாலி… விடு..
விடு தெனாலி… குடு…
குடு என்கிட்ட… குடு…
மன்னர்: மன்னா.. அதைப் படித்துப் பாருங்கள்…
நம் விரோதியான அண்டை நாட்டு மன்னன் எழுதியது…
மந்திரி2: மந்திரி அவர்களுக்கு… கிருஷ்ணதேவராயரை அடிக்கடி
ரோஜாக்கூட்டத்தைக் காண கூட்டி வாருங்கள்.. அந்த நேரத்தில் நகரத்திற்குள் கொள்ளையடிக்க வசதியாக இருக்கும்… இதைச் செய்தால் உங்களுக்கு கொள்ளையடிப்பதில் பாதி பங்கு அளிக்கப்படும்… இப்படிக்கு மன்னன் மார்த்தாண்டன்… மன்னித்து விடுங்கள் மன்னா…
மன்னா பொருளாசையில் இவ்வாறு தெரியாமல் தவறு செய்துவிட்டேன்..
மன்னர்: அறியாமைக்கு சட்டத்தில் இடம் கிடையாது அமைச்சரே… நீர்
செய்தது ராஜ துரோகம்.. அமைச்சரைக் கைது செய்து சிறையில் அடையுங்கள்…
தெனாலி ராமரே… எனக்கு உண்மையைப் புரிய வைத்தீர்கள்… மன்னருடன் இருப்பவர்களுக்கு… மற்ற எல்லாவற்றையும் விட… நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம் என்று உணர வைத்தீர்கள்…
VOICE OVER: என்ன குழந்தைகளே… பொழுது போக்குக்காக நாம
எங்கயாவது போனாக்கூட… நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு… நாம கண்டிப்பா கவனிக்கனும்… என்ன கவனிப்பிங்களா..
**************************************************************************************