Moral Stories - Tamil
Tenali Raman – The Secret – தெனாலிராமன் – தெனாலியின் ரகசியம்
தவறான ஆளுங்ககிட்ட நீங்க நட்பு வச்சிகிட்டா அது நமக்கு தான் ஆபத்துன்னு புரிஞ்சிகிட்டீங்க இல்ல

தெனாலியின் ரகசியம்
காட்சி-01 மன்னர்,மந்திரி சுந்தரர், ராஜகுரு, voice over…
VOICE OVER: கிருஷ்ண தேவராயரின் அரச சபையில் சுந்தரர் என்ற
அமைச்சர் இருந்தார்… அவர் தெனாலியை பழிவாங்க… நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்… ராஜகுருவுக்கும் தெனாலி மீது பொறாமை இருந்தது… சுந்தரர் அதை பயன்படுத்திக் கொண்டு… ராஜகுருவிடம் தெனாலியைப் பற்றி அவதூறாக பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டார்… தன் பேச்சையெல்லாம் ராஜகுரு செவிமடுத்துக் கேட்கிறார் என்று தெரிந்து கொண்டதும்… மன்னரைப் பற்றியும் அவதூறாக அவரிடம் பேச ஆரம்பித்தார்….
சுந்தரர்: ராஜகுருவே… அந்த தெனாலிராமர் ஒரு பெரிய
மோசக்காரர்… அவரின் பேச்சை நம்பும் நம் மன்னர்… சரியான முட்டாளாக இருப்பார் போலிருக்கிறது…
ராஜகுரு: தெனாலிராமன் சில விஷயங்களில் புத்திசாலியாக நடந்து
கொள்கிறார்… அதனால் மன்னருக்கு அவரைப் பிடித்திருக்கிறது… அதற்கு நாமென்ன செய்யமுடியும் சுந்தரரே…
சுந்தரர்: நீங்கள் இந்த ராஜ்ஜியத்திற்கே குரு… உங்களைக்கூட
தெனாலி மதிப்பதில்லையே…
ராஜகுரு: ம்… அதை நானும் கவனித்தேன்…
சுந்தரர்: கவனித்தால் மட்டும் போதாது… தெனாலியைப் பற்றி
அரசரிடம் கூறி, தெனாலியின் மதிப்பைக் குறைக்க வேண்டும்… ம்….
ராஜகுரு: அது… நீங்கள் வேண்டுமானால் கூறுங்கள்… நான்… அ…
என் பதவிக்கு அது அழகல்லவே…
சுந்தரர்: சரி… நான் அவ்வப்போது மன்னரிடம் தெனாலிராமரைப்
பற்றி அவதூறாக பேசி… மனதை மாற்றுகிறேன்… நீங்கள் அதை மறுத்துப் பேசாமல் இருந்தால் அதுவே போதும்…
ராஜகுரு: ம்.. அப்படியே செய்கிறேன்…
VOICE OVER: சுந்தரர் மன்னரை தோட்டத்தில் தனிமையில் சந்தித்து…
தெனாலிராமரைப் பற்றி… அவதூறாக பேசுகிறார்…
மன்னர்: ந்திரியாரே… எந்த குற்றத்தை யார் மேல் சுமத்தினாலும்…
அவர் இருக்கும் போது அரசவையில் சொல்லுங்கள்… உண்மையா என்று விசாரிக்கிறேன்… இப்போது நீங்கள் போகலாம்…
VOICE OVER: மந்திரியார் தலையைக் குனிந்து கொண்டு போக… மன்னர்
யோசனையில் ஆழ்கிறார்…
மன்னர்: இந்த அமைச்சர் சுந்தரர்… தொடர்ந்து பலநாட்களாக
தெனாலிராமர் மேல் புகார் கூறுகிறாரே… ஒருவேளை உண்மையாக இருக்குமோ…ம்.. எதற்கும் நாளை… சபையில் விசாரிப்போம்…
காட்சி-02 மன்னர், தெனாலி, voice over…மன்னர்:
மன்னர்: தெனாலி உங்கள் நடவடிக்கைப் பற்றி… பல புகார்கள்
வந்துள்ளன… நீங்கள் என்னைப் பற்றியே அவதூறாக பேசுவதாக செய்திகள் வருகின்றன.. இது உண்மையா…
தெனாலிராமன்: மன்னா… இதுபற்றி நான் இப்போது எதுவும் கூறமுடியாது…
சில நாட்கள் அவகாசம் வேண்டும்…
மன்னர்: அப்படியானால் பதில் கூறும் வரை நீங்கள் அரச சபைக்கு
வரவேண்டாம்…
தெனாலிராமன்: அப்படியே ஆகட்டும் மன்னா….
VOICE OVER: தெனாலி செல்வதைப் பார்த்த ராஜகுருவும், சுந்தரரும்…
ஒருவருக்கொருவரைப் பார்த்து புன்னகைப் புரிந்து கொண்டனர்…
காட்சி-03 மன்னர், தெனாலி, voice over…
VOICE OVER: அன்று இரவு தெனாலிராமன் மன்னரைக் கூட்டிக்கொண்டு…
ராஜகுருவின் மாளிகைக்கு சென்றார்… அங்கு ஜன்னல் ஓரம் நின்று.. உள்ளே சுந்தரர், ராஜகுருவிடம் பேசும் உரையாடலை கேட்க வைத்தார்…
சுந்தரர்: ராஜகுருவே.. நம் மன்னர் ஒரு அப்பாவியாக இருக்கிறார்…
நான் தெனாலிராமனைப் பற்றி சொன்னதையேல்லாம்.. ஹ.. ஹ… அப்படியே நம்பி விட்டார்… இன்னும் பாருங்கள்… சில நாட்களில் அந்த தெனாலியை நாட்டை விட்டே விரட்ட ஏற்பாடு செய்கிறேன்… ஹ…ஹ..ஹ…
VOICE OVER: சுந்தரர் சொல்வதற்கு பதில் கூறாவிட்டாலும், ராஜகுரு
அதை ஆமோதிப்பவர் போல் மௌனமாக இருந்தார்… இதைப் பார்த்த மன்னர்… சுந்தரரின் திட்டத்தை அறிந்தார்….
தெனாலிராமன்: மன்னா இப்போது உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து
விட்டதா…
மன்னர்: ஆம், ஆனால் ராஜகுரு மிகவும் நல்லவர்… அவரையும்
அல்லவா… இந்த சுந்தரர் கெடுக்கிறார்…ஆகையால் நல்லவரான ராஜகுருவை சுந்தரரின் நட்பிலிருந்து எப்படியாவது பிரிக்கவேண்டுமே..
தெனாலிராமன்:கண்டிப்பாக மன்னா… அதை நான் செய்து முடிக்கிறேன்…
கவலைப் படாதீர்கள்… அதற்கு சிறிது அவகாசம் தந்தால் போதும்…
காட்சி-04 தெனாலிராமன், மந்திரி சுந்தரர், ராஜகுரு, voice over..
VOICE OVER: ஒரு நாள் தெனாலிராமன் தன்வீட்டில் விருந்து ஒன்றினை
ஏற்பாடு செய்தார்….அதில் ராஜகுருவையும் சுந்தரரையும் அழைத்தார்…
விருந்தில் ராஜகுரு சற்று தள்ளி உட்கார்ந்திருக்க… சுந்தரரின் பக்கத்தில் தெனாலி போய் அமர்ந்தார்… சுந்தரரின் காதில் ஏதோ ரகசியம் பேசுவதுப் போல் பாவனை செய்தார்…
இதைப் பார்த்த ராஜகுருவிற்கு சந்தேகம் வந்தது…
ராஜகுரு: இந்த தெனாலி சுந்தரரிடம் என்ன பேசுகிறான்… ஒரு
வேளை நம்மைப் பற்றி இருக்குமோ…
தெனாலி ராமரன்:சுந்தரரே… நான் சொன்ன ரகசியத்தை யாரிடமும்
சொல்லி விடாதீர்கள்…
ராஜகுரு: தெனாலி உன்னிடம் என்ன ரகசியம் சொன்னான்..
சுந்தரர்: எதுவும் சொல்லவில்லை… ஏதோ முணுமுணுத்தார்…
அவ்வளவுதான்
VOICE OVER: ராஜகுருவிற்கு சுந்தரர் மீது இப்போது சந்தேகம்
பொங்கியது… இவர் மன்னரைப்பற்றியும், தெனாலியைப் பற்றியும், நம்மிடமே அவதூறாக கூறியவர் தானே… இன்று தெனாலி ஏதோ ரகசியம் கூறியவுடன், நம்மிடமே அதை மறைக்கிறார்… இனிமேல் இப்படிப் பட்டவரிடம் பழகவேக் கூடாது என்று எழுந்து போனவர்… சுந்தரரின் நட்பை முறித்து விடுகிறார்…
காட்சி-05 மன்னர், தெனாலி, voice over…
மன்னர்: வாருங்கள் தெனாலி… ஏதோ செய்து ராஜகுருவையும்,
சுந்தரரையும் சந்திக்காமல் செய்து விட்டீர்களே… மிக்க நன்றி…
தெனாலிராமன்: எதுவும் பெரியதாக செய்யவில்லை மன்னா… அவதூறாக
பேசும் சுந்தரரிடம் ராஜகுருவின் எதிரே ரகசியம் பேசுவது போல நடித்தேன்… முள்ளை முள்ளால் எடுப்பது போல… அது வேலை செய்தது… ராஜகுரு சுந்தரரையே சந்தேகப் பட்டு நட்பை முறித்தார்… அவ்வளவு தான்…
VOICE OVER: என்ன குழந்தைகளா… தவறான ஆளுங்ககிட்ட நீங்க நட்பு
வச்சிகிட்டா… அது நமக்கு தான் ஆபத்துன்னு புரிஞ்சிகிட்டீங்க இல்ல…
******************************************************************************************************