Moral Stories - Tamil
Tenali Raman – The Special Light – தெனாலிராமன் – தெனாலி காட்டிய அறிவொளி
நம்ம வாழ்க்கையில கல்வியறிவுங்கறது எத்தனை முக்கியம்னு தெரிஞ்சிகிட்டீங்களா

தெனாலி காட்டிய அறிவொளி
காட்சி-01 மன்னர், தெனாலி, மந்திரி, முனிவர் voice over…
VOICE OVER: விஜய நகரத்தில் தீபாவளித் திருநாள்..மன்னர் இந்த
தீபாவளித் திருநாளை சிறப்பாக மக்களுடன் சேர்ந்து கொண்டாட நினைத்தார்… மந்திரியாரை அழைத்தார்…
மன்னர்: மந்திரியாரே… நம் நகரத்து மக்களை விளக்கு அலங்காரம்
செய்யச் சொல்லுங்கள்… யார் வீட்டு அலங்காரம் அழகாக இருக்கிறதோ.. அவர்களுக்கு பத்தாயிரம் வெள்ளிக்காசுகள் பரிசு என்று அறிவிக்கச் செய்யுங்கள்…
VOICE OVER: மன்னரின் உத்தரவு மக்களுக்கு தெரிவிக்கப் பட்டது…
எல்லா மக்களும் அந்த பரிசினை தாமே வாங்கிவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டினர்…
தீபாவளித் திருநாள் அன்று மன்னர் மந்திரியார்,தெனாலிராமனுடன் நகர்வலம் வந்தார்….
ஒரு மாளிகை அருகே வரும்போது… அந்த மாளிகையின் தீப அலங்கார அழகைப் பார்த்து நின்றார்…
மன்னர்: மன்னா… இந்த மாளிகை நம் அரண்மனை
ரத்தினவியாபாரிக்கு சொந்தமானது.. இதற்கு பரிசு தரலாம் என்று நினைக்கிறேன்…
தெனாலிராமர்: மன்னா எனக்குத் தெரிந்த ஒரு இடத்தில் ஒரே விளக்கு
எரிந்து கொண்டிருக்கிறது… ஆனால் அது ஆயிரம் விளக்குகளுக்கு சமம்… நீங்கள் சம்மதித்தால் அதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்..
.
மன்னர்: ஒரு விளக்கு ஆயிரம் விளக்குகளுக்கு சமமா.. இப்போதே
செல்வோம்..
VOICE OVER: மன்னரும் மற்றவர்களும் தெனாலிராமனுடன்
செல்கின்றனர்…
ஊரின் ஒதுக்குப் புறத்தில் ஒரு ஆலமரமும்… அதன் அடியில் கூரையால் வேய்ந்த ஒரு ஆசிரமம் தெரிகிறது…
முனிவர்: வாருங்கள் மன்னா… உங்கள் வருகையால் இந்த ஆசிரமும்,
பின் தங்கிய இந்த ஏழை மாணவர்களும், பாக்கியம் செய்து விட்டனர்…
மன்னர்: ஆச்சாரியாரே… உங்கள் கல்விப் பணியைப்
பாராட்டுகிறேன்.. ஏழை மாணவர்களுக்கு நீங்கள் செய்யும் பணி…மகத்தானது…
தெனாலிராமர்: மன்னா ஆச்சாரியாருக்கு பக்கத்தில் எரிந்து
கொண்டிருக்கும் அந்த ஒற்றை விளக்கைப் பாருங்கள்… அது தான் நான் சொல்லிய அதிசய விளக்கு… இந்த ஒரு தீபம் ஆயிரம் தீபங்களுக்குச் சமம்… இந்த அறிவொளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்திருக்கிறார்கள்…
மன்னர்: தெனாலி நீங்கள் சொல்வது சரிதான். கல்விதான்
மனிதருக்கு அரிய விளக்கு… இந்த விளக்கை வைத்திருக்கும் இந்த ஆசிரமத்திற்கே.. இந்த வருட தீபாவளிப் பரிசு…
VOICE OVER: மன்னர் தீபாவளிப் பரிசான வெள்ளிக் காசு மூட்டையை
ஆச்சாரியாரிடம் கொடுக்க…. மாணவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவிக்கிறார்கள்…
VOICE OVER: என்ன குழந்தைகளே.. நம்ம வாழ்க்கையில…
கல்வியறிவுங்கறது எத்தனை முக்கியம்னு தெரிஞ்சிகிட்டீங்களா…
********************************************************************************************************