Moral Stories - Tamil
Tenali Raman – The Tiny Black Box – தெனாலிராமன் – கருப்புப் பெட்டி
நம்மளை சுத்தி நல்லவங்களும் இருப்பாங்க… கெட்டவங்களும் இருப்பாங்க நாம தான் யாரு எப்படின்னு பாத்து நடந்துக்கணும்

கருப்புப் பெட்டி
காட்சி-01 மன்னர், தெனாலி, மந்திரி, voice over…
VOICE OVER: ஒரு சமயம் கிருஷ்ண தேவராயரின் சபையில் இருந்த
மந்திரி ஒருவர்… மன்னரைக் காண வந்தார்..
மன்னர்: என்ன மந்திரியாரே…
மந்திரி: அரசே… விந்தியமலைச்சாரலில் பல ஆண்டுகள் தவமிருந்த
திருவெங்கி என்ற முனிவர்… சிவன் கோவிலுக்கு அருகே உள்ள ஆலமரத்தடியில் தவமிருக்கிறார்… மிகவும் சக்தி வாய்ந்த அந்த மகானை தாங்கள் தரிசித்தால், எல்லா எண்ணங்களும் ஈடேறும் மன்னா…
மன்னர்: அப்படியா… நாளைக்கே சென்று பார்க்கலாம்…
ஏற்பாடுகளை கவனியுங்கள்… தெனாலிராமனுக்கும் தகவல் சொல்லுங்கள்…
மந்திரி: ஆகட்டும் மன்னா…
கருப்புப் பெட்டி
காட்சி-02 மன்னர், தெனாலி, முனிவர், voice over…
VOICE OVER: மறுநாள் கிருஷ்ணதேவராயர் தன் பரிவாரங்களுடன்..
அந்த மகானைப் பார்க்கச் சென்றார்…
கோவிலுக்கு பக்கத்தில் உள்ள ஆலமரத்தடியில்… நீண்ட தாடி, ஜடாமுடி, கையில் கமண்டலம்.. இன்னொரு கையில் ஜெபமாலை ஆகியவற்றுடன் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார் அந்த முனிவர்…
மன்னர் அவரை வணங்கி நின்றார்…
முனிவர் மன்னரை உற்று நோக்கி… பேசினார்…
முனிவர்: மன்னா எச்சரிக்கை… உன்னை சுற்றி விரோதி ஒருவன்
இருக்கிறான்… அவன் உன்னை கொலை செய்ய நினைக்கிறான்..
மன்னர்: என்ன சொல்கிறீர்கள் சுவாமி….
முனிவர்: மன்னா… நீ உன் விரோதியைப் பார்க்க வேண்டுமா…
மன்னர்: ஆமாம் சுவாமி…
முனிவர்: இந்த கருப்புப் பெட்டியைப் பார்… பல வருடங்கள் என் தவத்தால்
இதை உருவாக்கி இருக்கிறேன்.. இதை திறந்து பார்த்தால்… உன் விரோதியின் முகம் இதில் தெரியும்…
மன்னர்: தாருங்கள் சுவாமி… இப்போதே அதை திறந்து பார்க்கிறேன்…
முனிவர்: ஆனால் ஒரு நிபந்தனை… முதலில் அந்த பெட்டியில் இருக்கும்
விபூதி எடுத்து… உன் நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும்… பிறகு தான் உன் விரோதி உன் கண்ணுக்குத் தெரிவான்…
தெனாலிராமன்: மன்னா… கொஞ்சம் நில்லுங்கள்… நீங்கள் இந்த பெட்டியை
திறக்கும் முன் என்னிடம் உள்ள இந்த சிறிய பெட்டியை இந்த மகான் திறந்து பார்க்க வேண்டும்… அப்போது தான் அவருக்கு தான் யாரென்பது புரியும்…
மன்னர்: சந்நியாசி… பெட்டியை திறந்து பார்த்த உடன் உங்கள்
முகம் ஏன் இப்படி மாறி விட்டது..
தெனாலிராமன்: அவர் சந்நியாசி இல்லை மன்னா… சதிகாரன்… அவர்
கொடுத்தது மந்திரப் பெட்டியும் இல்லை… அதில் உள்ளது விபூதியும் இல்லை… அது ஒரு விஷப் பொடி.. நீங்கள் நெற்றியில் வைத்துக் கொண்டிருந்தால்.. அது உங்களைக் கொன்றிருக்கும்…
முனிவர்: மன்னா என்னை மன்னித்து விடுங்கள்…
நான் பக்கத்து நாட்டு ஒற்றன்… அந்த மன்னரின் ஆணைப் படி இங்கு வந்தேன்…
மன்னர்: இவனை கைது செய்து சிறையில் அடையுங்கள்… தெனாலி
உங்களைத்தவிர வேறுயார் என்னையும் இந்த நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும்… ஒரு சிறிய சந்தேகம்… அந்த ஏமாற்றுக்காரனிடம் கொடுத்த பெட்டியில்.. என்ன வைத்துக் கொடுத்தீர்கள்…
தெனாலிராமன்: ஹ.. ஹ…ஹ… உன்னுடன் வந்தவர்கள்… ஏற்கனவே
பிடிபட்டுவிட்டார்கள் என்ற துண்டு ஓலையைத்தான்…
மன்னர்: ஹ.. ஹ…ஹ… ஹ.. ஹ…ஹ…
VOICE OVER: என்ன குழந்தைகளே… நம்மளை சுத்தி நல்லவங்களும்
இருப்பாங்க… கெட்டவங்களும் இருப்பாங்க… நாம தான் யாரு எப்படின்னு பாத்து நடந்துக்கணும்… என்ன புரிஞ்சிகிட்டீங்களா…
*******************************************************************************************************