Connect with us

Moral Stories - Tamil

Tenali Raman – True Artist – தெனாலிராமன் – சிறந்த சிற்பி

நாம நம்ம திறமையை வளர்த்துகிட்டா பணமும், புகழும் நம்மளை தானே தேடிவரும்னு புரிஞ்சிகிட்டிங்களா

Tenali Raman – True Artist – தெனாலிராமன் – சிறந்த சிற்பி PR038 07

சிறந்த சிற்பி

காட்சி-01 மன்னர், தெனாலி, சிற்பி, voice over…

VOICE OVER: விஜய நகரத்தில் குளிர் காலம் ஆரம்பமாகியது…

மழைச்சாரலும் பசுமையான செடிகொடிகளும், கண்ணுக்கு இதமாக இருந்தன…

தன் அரண்மனையின் உப்பரிகையிலிருந்து நகரத்தின் அழகைப் பார்த்தார் மன்னர்… இந்த குளிர்காலத்தை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்தார்… இந்த வருடம் நாட்டில் உள்ள சிற்பிகளை வரவழைத்து, அவர்களில் சிறந்த சிற்பிக்கு பரிசளிக்க முடிவு செய்தார்… அரச சபை கூடியது

மந்திரி: மன்னா… இம்முறை நம் அரண்மனை சிற்பி வேலப்பருக்கு…

பரிசு வழங்கலாம் மன்னா…

தெனாலிராமர்: கூடாது மன்னா… இந்த முறை உண்மையான சிற்பி

Advertisement

ஒருவரை தேடிப்பிடித்து பரிசு வழங்க வேண்டும்…

மன்னர்: உண்மையான சிற்பி என்றால்…

தெனாலிராமர்: உண்மையான சிற்பி சிற்பத்தை மட்டும் செதுக்காமல்…

அதில் தன் எண்ணங்களையும் செதுக்குவார்… பிறரைப் பற்றி கவலைப் படமாட்டார் மன்னா… அப்படிப் பட்ட உன்னதமான சிற்பியை எனக்கு தெரியும்…

VOICE OVER: தெனாலி ராமன் கூறியதை அடுத்து… அவர் கூறிய

உண்மையான சிற்பியைக் காண… மன்னரும் மற்றவர்களும்… தெனாலி ராமருடன் காட்டிற்கு சென்றனர்…

அங்கு கருப்பு மலைக்குகையில்… ஒரு சிற்பி ஏராளமான சிற்பங்களை செதுக்கிக் கொண்டிருந்தார்.. மன்னர் வந்து நின்றதை கூட அவர் கவனிக்க வில்லை… தன் வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்…

மன்னர்: சிற்பியே.. என்ன செதுக்குகிறீர்கள்…

Advertisement

சிற்பி: இது மழை தேவதையின் சிலை… மேகங்களையும்,

மழைச்சாரல்களையும், பார்த்து மகிழ்ச்சிக் கூத்தாடும் கலை…

VOICE OVER: உயிரோட்டமுள்ள அந்த சிலை… மன்னருக்கு மிகவும்

பிடித்து இருந்தது… மழைக்காலத்திற்கு பரிசு பெற இந்த சிற்பி தான் தகுதி வாய்ந்தவர் என்று நினைத்தார்…

மறுநாள் அரச சபைக்கு அந்த சிற்பி வரவழைக்கப் பட்டு, பரிசு வழங்கப்

பட்டார்… ஒரு உண்மையான சிற்பியைக் கண்டுபிடித்தும், அறிமுகம் செய்து வைத்த தெனாலி ராமனுக்கு மன்னர் பரிசுகளை வாரி வழங்கினார்…

என்ன குழந்தைகளே… நாம நம்ம திறமையை வளர்த்துகிட்டா… பணமும், புகழும் நம்மளை தானே தேடிவரும்னு புரிஞ்சிகிட்டிங்களா…

**************************************************************************************

Advertisement
Continue Reading
Advertisement